தேசிய செய்திகள்

நண்பர்களுடன் மலையேற சென்றபோது பாறை இடுக்கில் சிக்கிய வாலிபர்...! மீட்கும் பணி தீவிரம்

நண்பர்களுடன் மலையேற சென்றபோது பாறை இடுக்கில் வாலிபர் சிக்கி கொண்டுள்ளார்.

திருவனந்தபுரம்,

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர். ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை.

இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...