தேசிய செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது? : 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது

சுப்ரீம் கோர்ட்டில் நேரடி விசாரணை எப்போது என்பது குறித்து வரும் 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படுகிறது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா காரணமாக சுப்ரீம் கோர்ட்டில் தற்போது ஆன்லைன் வாயிலாக வழக்குகள் விசாரிக்கப்பட்டு வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 16 சதவீதம் இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன் நேற்று நடைபெற்றது.

மராட்டிய அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, ஆன்லைன் விசாரணையில் சிக்கல் உள்ளது. நேரடி விசாரணையை தொடங்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது நீதிபதி அசோக் பூஷண், சுப்ரீம் கோர்ட்டு நேரடி விசாரணையை மீண்டும் தொடங்குவது குறித்து ஜனவரி 25-ந் தேதிக்குள் முடிவு எடுக்கப்படும். மராத்தா இடஒதுக்கீடுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணையை பிப்ரவரி 5-ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று தெரிவித்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து