தேசிய செய்திகள்

காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்திப்பது எப்போது?-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி குழு பிரதமரை சந்திப்பது எப்போது என்பது குறித்து துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு,

கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கோரிக்கைகளை முறையிடுவோம்

சந்திரயான்-3 திட்ட வெற்றியில் தென்இந்திய மற்றும் வட இந்திய விஞ்ஞானிகளின் பங்கு உள்ளது. நான் இஸ்ரோ அலுவலகத்திற்கு நேரில் சென்று விஞ்ஞானிகளை கவுரவித்தேன். முதல்-மந்திரியும் நேரில் வந்து கவுரவித்துள்ளார். இந்தியா மீண்டும் ஒரு தனது பலத்தை உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளது. ஒரு கன்னடராக எனக்கு பெருமை அளிக்கிறது.

காவிரி பிரச்சினையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் அடங்கிய குழுவை டெல்லிக்கு அழைத்து செல்வது குறித்து தேதி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். அந்த தேதியை பிரதமான் அலுவலகத்திற்கு தெரிவிப்போம். அங்கு நேரம் கிடைத்ததும் பிரதமரை சந்தித்து எங்களின் கோரிக்கைகளை முறையிடுவோம். சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடத்தின் நிலைப்பாட்டை தெரிவிப்போம்.

ஆலோசனை நடத்தப்படும்

மேகதாது, காவிரி, மகதாயி உள்ளிட்ட பல்வேறு நதி நீர் பங்கீட்டு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து டெல்லியில் ஆலோசனை நடத்தப்படும். மத்திய நீர் ஆணையம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் என்ற நம்பிக்கை உள்ளது. கர்நாடகத்தின் நலனை நாங்கள் எப்போதும் நிராகரிக்க மாட்டோம்.

சந்திரயான் வெற்றியால் மகிழ்ச்சி, காவிரி பிரச்சினையால் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவற்றுக்கு மத்தியில் தேசிய கல்வி கொள்கை ரத்து குறித்து மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறிய கருத்துக்கு நான் பதிலளிக்க வேண்டுமா?. இதை விட்டுவிட்டு அவர் கர்நாடகத்திற்கு உதவி செய்வது குறித்து ஆலோசிக்க வேண்டும்.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு