தேசிய செய்திகள்

5 மாநில தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது? வெளியான முக்கிய தகவல்

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது.

புதுடெல்லி,

தமிழ்​நாடு, மேற்கு வங்​காளம், அசாம், புதுச்​சேரி, கேரளம் ஆகிய 5 மாநிலங்​களுக்கு தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் தலை​மையி​லான தேர்​தல் ஆணை​யர்​கள் சென்று தேர்​தல் பணி​கள் தொடர்​பாக ஆலோ​சனை நடத்​தி​விட்​டு கடந்த 10ம் தேதி டெல்லி திரும்​பி​யுள்​ளனர். அதன்படி இன்னும் 3 நாட்களுக்குள் தமிழ்நாடு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. வழக்​க​மாக ஆய்வு முடிந்த ஓரிரு நாட்​களில் தேர்​தல் தேதி அறிவிப்பு வெளி​யாகும். எனவே, 5 மாநில தேர்​தல் தேதி வெளியாகும் தேதி குறித்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதில் அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு, மேற்கு வங்காளம் ஆகிய 5 மாநில தேர்தல் தேதிகளை, இந்திய தேர்தல் ஆணையம் வரும் செவ்வாய்கிழமை (17.3.26) மாலை 3 மணிக்கு அறிவிக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

அதேபோல் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது என சொல்லப்படுகிறது. மேலும் மேற்கு வங்காளத்தில் 3 முதல் 4 கட்டங்களாகவும், அசாமில் இரு கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

மேலும் 5 மாநில தேர்தலுடன் சில மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு இடைத்தேர்தலும் அறிவிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே முதல் வாரத்தில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.