புதுடெல்லி
பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசியான கோவாக்சினின் அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக அக்டோபர் மாதம் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்து உள்ளது.
கொரோனாவிற்கு எதிராக கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகளும் நம் நாட்டில் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில், கோவாக்சின் முழுக்க முழுக்க இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது. கோவாக்சின் தடுப்பூசிக்கு மட்டும் உலக சுகாதார அமைப்பு இதுவரை அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதிக்க கோரி பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பத்தை கடந்த ஏப்ரல் 19ம் தேதி சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பது குறித்து அக்டோபர் மாதத்தில் முடிவெடுக்கப்படும் என உலக சுகாதார நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.