தமிழ்நாடு, கேரளா, புதுவை, மேற்கு வங்காளம் உள்பட ஐந்து மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் எண்ணப்படுகின்றன. தமிழ்நாட்டில் வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவற்றில் திமுக கூட்டணியே ஆட்சி அமைக்கும் என்று கூறியுள்ளன.
இது குறித்து மத்திய அமைச்சரும் தமிழக பாஜக மேலிட பொறுப்பாளருமான பியூஸ் கோயலிடம் செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதில் அளித்த பியூஸ் கோயல், தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: என்றார்.