தேசிய செய்திகள்

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது ஏன்? - பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கேள்வி

ஊழல் திட்டம் என்று கூறிவிட்டு தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கியது ஏன் என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

5-வது கட்ட பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை அறிவித்த மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதலாக ரூ.40 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக அறிவித்தார்.

இதுபற்றி உத்தரபிரதேச மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அசோக் குமார் கூறுகையில், பிரதமர் மோடி கடந்த 2015-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் பேசுகையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் வறுமையின் அடையாளமாக விளங்குவதாகவும், ஊழல் நிறைந்த திட்டம் என்றும் குறை கூறினார். அப்படி குறை கூறிவிட்டு இப்போது அந்த திட்டத்துக்கு பாரதீய ஜனதா அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து இருப்பது ஏன்? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். இதன் மூலம் பாரதீய ஜனதாவின் உண்மையான முகம் வெளிப்பட்டு இருப்பதாகவும் அசோக் குமார் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை