தேசிய செய்திகள்

கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன்? - மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி

கொரோனா நிவாரண நிதிக்கு நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பயம் ஏன் என மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிம் கேர்ஸ் பண்ட் (கொரோனா நிவாரண நிதி) மூலம் மத்திய அரசு நிதி திரட்டி வருகிறது.

திரைப்பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் தொடங்கி கூலித்தொழிலாளி வரை அனைத்து தரப்பு மக்களும் இதில் நிதி அளித்து வருகின்றனர்.

எனினும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக பிரதமர் தேசிய நிவாரண நிதி என்ற அமைப்பு இருக்கும் போது எதற்காக பிம் கேர்ஸ் பண்ட் என்கிற அமைப்பை உருவாக்கி நிதி திரட்டப்படுகிறது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றன.

இதனிடையே பிம் கேர்ஸ் பண்ட் நிதியை நாடாளுமன்ற குழு ஆய்வு செய்வதற்கு பா.ஜ.க. எம்பிக்கள் முட்டுக்கட்டை போடுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் பிம் கேர்ஸ் பண்ட் மூலம் நன்கொடை அளித்தவர்களின் பெயர்களை வெளியிடுவதில் பிரதமர் ஏன் மிகவும் பயப்படுகிறார். சீன நிறுவனங்களான ஹவாய், ஷியோமி மற்றும் ஒன் பிளஸ் ஆகிய நிறுவனங்கள் நன்கொடை அளித்தது அனைவருக்கும் தெரியும். இருந்தும் அவர் ஏன் விபரங்களை பகிர்ந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது