தேசிய செய்திகள்

பெண் எம்.எல்.ஏ பாதுகாப்புக்கு சென்ற மத்திய பாதுகாப்பு படை வீரர்களே உணவும் வழங்கும் பரிதாபநிலை

மேற்கு வங்காளத்தில் குடிசையில் வாழும் பா.ஜ.க பெண் எம்.எல்.ஏவுக்கு உணவும் வழங்கி பாதுகாப்பு வழங்கும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள்.

கொல்கத்தா:

மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ. சந்தான பவுரி. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளரை விட 4,145 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

மேற்குவங்காளத்தில் நடைபெறும் வன்முரையால் அங்குள்ள பா.ஜ.க எம்.எலேக்கள் அனைவருக்கும் மத்திய பாதுகாப்புபடை வழங்கப்பட்டு உள்ளது . தனது கட்சியின் முடிவுக்கு எம்.எல்.ஏ சந்தனாவும் கட்டுப்பட்டு உள்ளார்.

தினசரி கூலித்தொழிலாளியின் மனைவியான எம்.எல்.ஏ சந்தனா. தனது பாதுகாப்புக்காக அனுப்பப்பட்ட நான்கு மத்திய படை வீரர்களுக்கு தினசரி உணவு அல்லது அவர்களுக்கு தங்குவதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியவில்லை.

எம்.எல்.ஏ.வின் கணவரும், அவரது இரண்டு குழந்தைகளும் பாழடைந்த ஒற்றை அறை குடிசையில் தண்ணீர் வசதி - கழிப்பறை வசதி கூட இல்லாமல் வசித்து வருகின்றனர்.

ஊரடங்கால் எம்.எல்.ஏவின் கணவருக்கும் வேலை இல்லை.

இதனால் பாதுகாப்பு பணிக்கு சென்ற மத்திய படை வீரர்கள் தங்கள் சொந்த பணத்தை போட்டு உள்ளூர் மளிகைப் பொருட்களிலிருந்து காய்கறிகளை வாங்கி எம்.எல்.ஏவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் உணவு வழங்கி வருகின்றனர்.

என் கணவர் ஒரு கூலித்தொழிலாளி . எங்கள் தினசரி சராசரி வருமானம் ரூ .400 ஆகும். ஊரடங்கால் வருமானம் இல்லை நானும் என் கணவரும் என்று எம்.எல்.ஏ. கூறினார்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு