பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகரில் உள்ள இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் சி.எஸ். பாட்டீல் கூறும்பொழுது, கர்நாடகா மாநிலம் முழுவதும் வருகிற 17ந்தேதி வரை பரவலாக மழை பெய்ய கூடும் என கூறியுள்ளார்.
இதேபோன்று வருகிற 17ந்தேதி வரை கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை (தீவிர கனமழை பெய்ய கூடும்) விடப்பட்டு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இதனால், அந்த பகுதியை சேர்ந்த தாழ்வான இடத்தில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு பகுதிகளுக்கு செல்லும்படி கேட்டு கொள்ளப்பட்டு உள்ளனர்.