தேசிய செய்திகள்

சி.பி.ஐ. காவலில் இருக்கும் ப.சிதம்பரத்துடன் மனைவி, மகன் சந்திப்பு

சி.பி.ஐ. காவலில் இருக்கும் ப.சிதம்பரத்தை, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் சந்தித்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு டெல்லியில் உள்ள சி.பி.ஐ. தலைமை அலுவலக விருந்தினர் இல்லத்தில் காவலில் வைக்கப்பட்டு இருக்கும் ப.சிதம்பரத்தை அவரது மனைவி நளினி, மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோர் நேற்று மாலை சந்தித்து பேசினார்கள்.

சந்திப்பு முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம் நிருபர்களிடம் கூறுகையில், கோர்ட்டு வழக்கு விசாரணை குறித்து தாங்கள் ஆலோசனை நடத்தியதாகவும், தனது தந்தை உற்சாகத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். தனது தந்தை படிக்க புத்தகம் கேட்டதாகவும், அதை கொண்டு வந்து கொடுத்ததாகவும் கூறினார். அப்போது, ஊழல் செய்தவர்கள் யாரும் தப்பிக்க முடியாது என்று பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? என்று அவரிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு கார்த்தி சிதம்பரம் பதில் அளிக்கையில், அது சரிதான். ஊழல் செய்த யாரும் தப்பிக்கக்கூடாது என்று கூறியதோடு, நானோ, எனது தந்தையோ ஊழல் செய்யாததால் நாங்கள் குற்றமற்றவர்கள் என்பது நிரூபணம் ஆகும் என்றும் தெரிவித்தார்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு