தேசிய செய்திகள்

மனைவி சுனந்தா புஷ்கர் மர்மச்சாவு: சசி தரூர் எம்.பி., முன்ஜாமீன் ரத்து இல்லை

மனைவி சுனந்தா புஷ்கர் மர்மச்சாவு தொடர்பான வழக்கில், சசி தரூர் எம்.பி.யின் முன்ஜாமீன் ரத்து இல்லை என டெல்லி ஜகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

புதுடெல்லி,

முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர். இவர் கடந்த 2014ம் ஆண்டு, ஜனவரி 17ந் தேதி டெல்லி நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், சசிதரூர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில், அவர் சம்மன் பிறப்பித்த டெல்லி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகவில்லை. மாறாக, டெல்லி செசன்ஸ் கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்று விட்டார்.

இந்த முன்ஜாமீனை ரத்து செய்யக்கோரி தீபக் ஆனந்த் என்ற வக்கீல், டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஆர்.கே. காபா, இன்று விசாரித்தார். அவர் சசி தரூருக்கு வழங்கப்பட்ட முன் ஜாமீனை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு