தேசிய செய்திகள்

ராமர் கோவில் கும்பாபிஷேகம்.. அழைப்பு வந்தால் பங்கேற்பேன்: ஹேமந்த் சோரன் பேட்டி

கும்பாபிஷேக விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என அக்கட்சியின் பொதுசெயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார்.

ராஞ்சி:

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் அடுத்த மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக நாடு முழுவதிலும் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என ஏராளமானோருக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கலந்து கொள்ளாது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்துள்ளார். இதேபோல் பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்கள் விழாவை புறக்கணிப்பார்கள் என கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா தொடர்பாக இதுவரை தனக்கு அழைப்பு வரவில்லை என்றும், வந்தால் விழாவில் பங்கேற்பேன் என்றும் கூறினார்.

மத நம்பிக்கை கொண்ட தான், கோவில்கள் மற்றும் குருத்வாராக்கள் போன்ற மத வழிபாட்டு தலங்களுக்கு செல்வதாகவும் சோரன் கூறினார்.

"ஜேஎம்எம்-காங்கிரஸ்-ஆர்ஜேடி கூட்டணி அரசாங்கம் 4 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆனால் ஆட்சிக்கு வந்ததில் இருந்து எதிர்க்கட்சிகள் அதை சீர்குலைக்க முயற்சி செய்தன. நாங்கள் பழங்குடியின மக்கள்தான், ஆனால் முட்டாள்கள் அல்ல. எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பை சமாளிப்பது எப்படி? என்பது எங்களுக்கு தெரியும்" என்றும் ஹேமந்த் சோரன் கூறினார்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு