தேசிய செய்திகள்

முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை நீடிப்பாரா?; வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில்

முதல்-மந்திரி பதவியில் பசவராஜ் பொம்மை நீடிப்பாரா? என்பதற்கு வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பதில் அளித்துள்ளார்.

தினத்தந்தி

பெங்களூரு:

பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ. சுரேஷ்கவுடா, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை மாற்றப்பட இருப்பதாகவும், சுதந்திர தின விழாவுக்கு முன்பு இந்த மாற்றம் நடைபெறும் என்றும் கூறினார். இது கர்நாடகத்தில் விவாததை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக காங்கிரஸ் கட்சி, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை மாற்றப்படுவது குறித்து கருத்து வெளியிட்டுள்ளது. பா.ஜனதா 3-வது முதல்-மந்திரியை தேடுவதாக அக்கட்சி கிண்டல் செய்துள்ளது. இதுகுறித்து வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உள்துறை மந்திரி அமித்ஷா பெங்களூரு வந்திருந்தபோது, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் செயல்பாடுகளை பாராட்டினார். பசவராஜ் பொம்மை மாற்றப்பட மாட்டார். முதல்-மந்திரி பதவியில் அவரே நீடிப்பார். சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்றால் பசவராஜ் பொம்மையே மீண்டும் முதல்-மந்திரி ஆவார். முதல்-மந்திரி மாற்றப்படுவதாக கூறுபவர்களை மனநலம் பாதித்த ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்