சண்டிகார்,
பாதுகாப்பு படை வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு குறித்து குறை கூறி சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டதால் தேஜ் பகதூர் யாதவ் என்ற பாதுகாப்பு படை வீரர் கடந்த 2017 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டார். இந்த நிலையில், முன்னாள் பாதுகாப்பு படை வீரரான தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில் மோடியை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
ஹரியானாவின் ரேவரியில் செய்தியாளர்களிடம் பேசிய தேஜ் பகதூர் யாதவ், வாரணாசி தொகுதியில், பிரதமர் மோடியை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராக போட்டியிட முடிவு செய்துள்ளேன். ஊழல் பிரச்சினையை நான் எழுப்பியதால், என்னை பணி நீக்கம் செய்தார்கள். எனது முதல் நோக்கம் என்னவெனில், பாதுகாப்பு படை துறையில் உள்ள ஊழலை ஒழிப்பதுதான் என்றார்.