தேசிய செய்திகள்

மராட்டியத்தில் அரசு அறிவிப்பின்படி பள்ளிகள் 17-ந் தேதி திறக்கப்படுமா? உள்ளூர் நிர்வாகம் முடிவு எடுக்க அதிகாரம்

வருகிற 17-ந் தேதி பள்ளிகளை திறப்பதில் அந்தந்த மாநகராட்சி கமிஷனர்கள், மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என மந்திரி வர்ஷா கெய்க்வாட் அறிவித்து உள்ளார்.

தினத்தந்தி

மராட்டியத்தில் கொரோனா 2-வது அலையால் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருந்த 10, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது.

பள்ளிகள் திறப்பு

இதேபோல மற்ற வகுப்பு மாணவர்களுக்கும் இறுதி தேர்வுகள் நடத்தப்படவில்லை. 1 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டனர். இந்தநிலையில் ஜூன் மாதம் ஆன பிறகும் கொரோனா தொற்று காரணமாக மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்து வந்தன.கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் கடந்த மாதம் 15-ந் தேதி முதல் ஊரகப்பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன.

17-ந் தேதி முதல்...

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு குறைந்த ஊரக பகுதிகளில் வருகிற 17-ந் தேதி முதல் 5 முதல் 7-ம் வகுப்பு வரையும், நகர் பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையும் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தார்.மேலும் பள்ளிகளை திறப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டன. இதில் வகுப்பறை 15 முதல் 20 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும், பெற்றோர் பள்ளி வளாகத்திற்குள் வரக்கூடாது என பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருந்தன.

பணிக்குழு எதிர்ப்பு

இந்தநிலையில் மாநிலத்தில் கூடுதலாக பள்ளி கூடங்களை திறக்க மாநில கொரோனா தடுப்பு பணிக்குழு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவர்கள் பள்ளிகள் திறந்தால் அதனால் தொற்று எளிதில் பரவி பாதிப்பு அதிகரிக்கும் என கடந்த புதன்கிழமை இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசிடம் கூறியுள்ளனர்.குறிப்பாக பள்ளி கூடங்கள் திறக்கப்பட்ட நாடுகளில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்ததை அவர்கள் முதல்-மந்திரியிடம் சுட்டிக்காட்டியதாக தெரிகிறது. அந்த ஆலோசனை கூட்டத்தில் கல்வி மந்திரி வர்ஷா கெய்க்வாட் கலந்து கொள்ளவில்லை.இதனால் வருகிற 17-ந் தேதி முதல் நகர் பகுதிகளில் 8 முதல் 12-ம் வகுப்பு வரையும், ஊரக பகுதிகளில் 5 முதல் 7-ம் வகுப்பு வரையும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதில் குழப்பம் ஏற்பட்டது.

மந்திரி அறிவிப்பு

இதற்கு பதிலளிக்கும் வகையில் மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறியிருப்பதாவது:-

பள்ளிகளை திறப்பதில் எந்த கட்டாயமும் இல்லை. பள்ளிகளை திறப்பது பற்றி அந்தந்த மாநகராட்சி கமிஷனாகள், மாவட்ட கலெக்டர்கள் முடிவு செய்து கொள்ளலாம். கொரோனா பணிக்குழு உறுப்பினர்களுக்கு பள்ளிகளை திறப்பது தொடர்பான எங்களின் வழகாட்டு நெறிமுறைகள் (எஸ்.ஒ.பி.) பற்றி தெரியாது. இதனால் மீண்டும் ஒரு கூட்டம் நடைபெறும். கல்வித்துறை செயலாளர் கொரோனா பணிக்குழுவின் வழிகாட்டு நெறிமுறைகளை ஆய்வு செய்து வருகிறா.

இவ்வாறு அவர் கூறினார்.

எனவே வருகிற 17-ந் தேதி முதல் அரசு அறிவித்தபடி பள்ளிகள் திறப்பதற்கான அதிகாரம் உள்ளூர் நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. கொரோனா சூழலை கருத்தில் கொண்டு உள்ளூர் நிர்வாகம் முடிவு செய்ய உள்ளது. இருப்பினும் 17-ந் தேதிக்கு முன் அரசால் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்