தேசிய செய்திகள்

தந்தை மறைவால் காலியான தொகுதியில் மனோகர் பாரிக்கர் மகன் போட்டியிடுவாரா?

தந்தை மறைவால் காலியான தொகுதியில் மனோகர் பாரிக்கர் மகன் போட்டியிடுவது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

பனாஜி,

கோவா மாநில முதல்-மந்திரியாக இருந்த மனோகர் பாரிக்கர், கடந்த 17-ந் தேதி காலமானார். அதனால் அவர் தேர்ந்தெடுக்கப்பட்ட பனாஜி சட்டசபை தொகுதி காலியிடமாக அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில், மனோகர் பாரிக்கரின் மூத்த மகன் உத்பல் பாரிக்கர் போட்டியிட வேண்டும் என்று பா.ஜனதா பிரமுகர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். இதுபற்றி கேட்டதற்கு உத்பல் பாரிக்கர் கூறியதாவது:-

தந்தை மறைவு ஏற்படுத்திய சோகத்தில் இருந்து நான் இன்னும் மீளவில்லை. எனவே, அதுபற்றி சிந்திக்கவில்லை. சரியான நேரத்தில் அதுபற்றி முடிவு செய்வேன். இது, துக்க காலம் என்பதால், பா.ஜனதா மேலிடமும் என்னிடம் இதுபற்றி எதுவும் பேசவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.