புதுடெல்லி,
மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போர்க்கொடி உயர்த்தி வருகின்றனர். இந்த சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலைமுறையை ஒழித்துக்கட்டுவதுடன், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பின்னால் கையேந்தி நிற்கச்செய்து விடும் என கூறி, அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் போராடி வருகிறார்கள்.
இந்த நிலையில், விவசாய சங்க தலைவர்களில் ஒருவரான ராகேஷ் திகாய்த் கூறுகையில், 3 கருப்பு சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி தேவைப்பட்டால் லட்சகணக்கான டிராக்டர்களுடன் பாராளுமன்றம் வருவோம்.
குடியரசு தின விழாவின் போது 3,500 டிராக்டர்களுடன் டெல்லி வந்தோம். இதில் எதுவுமே வாடகை டிராக்டர்கள் இல்லை என்றார். மேலும், விவசாயத்துறை மந்திரி நரேந்திர சிங் தோமரின் பெயரை குறிப்பிடாமல் அவரை விமர்சித்த ராகேஷ் திகாய்த், அவர் அதிகாரமற்றவர், சொந்தமாக எந்த முடிவையும் எடுக்க முடியாதவர் என்றார்.