தேசிய செய்திகள்

2022-க்குள் நக்சல், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்: உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் திட்டவட்டம்

2022 ஆம் ஆண்டுக்குள் நக்சலைட்டு, காஷ்மீர் பிரச்சினைக்கு முடிவு வரும் என்று உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். தலைநகர் டெல்லியில் நடைபெற்ற புதிய இந்தியா நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: பயங்கரவாதம், நக்சலிசம், கஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

இந்த பிரச்சினைகள் குறித்து அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், உங்களுக்கு நான் ஒரு உறுதி அளிக்கிறேன். அது என்னவெனில், 2022-க்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்