தேசிய செய்திகள்

வேட்பாளர் படிவங்களில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட தடை வருமா? - சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு ஒத்திவைப்பு

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேட்பாளர் படிவங்களில் கையெழுத்திட தடைகோரும் வழக்கில் தீர்ப்பை ஒத்தி வைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

புதுடெல்லி,

அ.தி.மு.க வேட்பாளர்கள் தாக்கல் செய்யும் வேட்பு மனுவில் வேட்பாளர்களை அங்கீகரித்தும், சின்னம் ஒதுக்க பரிந்துரை செய்தும் கட்சியின் பொதுச்செயலாளர் கையெழுத்து இடும் ஏ மற்றும் பி ஆகிய படிவங்களில் அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கையெழுத்திடுவதற்கு தடை விதிக்கக்கோரி அ.தி.மு.க முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று டெல்லி ஐகோர்ட்டில் நீதிபதி யோகேஷ் கன்னா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் கே.சி.பழனிசாமி தரப்பில் மூத்த வக்கீல் ஹரிஹரன் ஆஜராகி, கட்சியின் பல்வேறு விதிமுறைகளை மாற்றினாலும், பொதுச்செயலாளர் என்ற பதவியை ரத்துசெய்ய முடியாது, அதேபோல பொதுச்செயலாளர் நியமனம் என்பது கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் வாக்குகள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே அந்த விதியை யாராலும் மாற்ற முடியாது. ஆனால் இங்கு அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் பதவி ரத்துசெய்யப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே, வேட்புமனு தாக்கலின்போது பொதுச்செயலாளருக்கு மட்டுமே கையெழுத்து இட அதிகாரம் உள்ள ஏ மற்றும் பி ஆகிய படிவங்களில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கையெழுத்திட அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் மூத்த வக்கீல் முகுல் ரோகத்கி ஆஜராகி, இது உள்கட்சி விவகாரம். இதில் தலையிடுவதற்கு மனுதாரருக்கு எந்த முகாந்திரமும் இல்லை. கட்சியின் திருத்தப்பட்ட விதிமுறைகளை தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொண்டு கட்சியின் சின்னத்தையும் பெயரையும் ஒருங்கிணைந்த குழுவுக்கு வழங்கி இருக்கிறது. எனவே இந்த இருவருக்கும் இந்த படிவங்களில் கையெழுத்திட அனைத்து உரிமையும் உள்ளது. இதில் தலையிட மனுதாரருக்கு எந்த உரிமையும் கிடையாது என்று வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்