தேசிய செய்திகள்

டிசம்பர் மாதத்திற்குள் அனைவருக்கும் தடுப்பூசி : மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர்

இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அவர்கள் செய்தியாளர் சந்திப்பின் போது பேசுகையில், இந்தியாவில் 2021 டிசம்பருக்குள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படும். தடுப்பூசி போடும் பணிகளில் மத்திய அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. உலகில் வேகமாக கொரோனா தடுப்பூசி போடும் 2-வது நாடு இந்தியா. என்றார்.

மேலும் ராகுல் காந்தி பற்றி பேசிய அவர், தடுப்பூசி போடுவதில் உங்களுக்கு அக்கறை இருந்தால் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களுக்கு கவனம் செலுத்துங்கள் என்றும், மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

முன்னதாக, விரைவில் தடுப்பூசி போடாவிட்டால் கொரோனா இன்னும் பல அலைகளாக வந்து தாக்கும் என்று ராகுல் காந்தி மத்திய அரசை விமர்சித்து இருந்தார்.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து