கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

இந்தியாவில் கடந்த 102 நாட்களுக்குப்பின் 40 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 37,566 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

கொரோனா தொற்றின் 2-வது அலை இந்தியாவில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. தினசரி பாதிப்பு பல நாட்கள் 4 லட்சத்தை தாண்டியது. தற்போது ஊரடங்கு, பொதுமுடக்கம், கட்டுப்பாடுகளால் 2-வது அலை தொடர்ந்து குறைந்து வருகிறது.

நேற்று தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கை 46,148 ஆக உயர்ந்திருந்தது. மேலும் கடந்த ஏப்ரல் 12ஆம் தேதிக்கு பிறகு முதல் முறையாக நேற்று 1000-க்கு கீழ் கொரோனா உயிரிழப்புகள் பதிவானது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 37 ஆயிரத்து 566 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,03,16,897 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 907 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 3,97,637 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 56,994 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,93,66,601 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 5,52,659 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்