மும்பை,
இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மராட்டிய மாநிலம்தான். அங்கு தற்போது வரை கொரோனா வைரசால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மும்பை நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியும் பாதிக்கப்பட்டுள்ளது.
தாராவியில் இன்று மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், தாராவியில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் கொரோனா பாதிப்பால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.
இந்நிலையில் மராட்டியத்தில் மேலும் 466 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,666 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தொற்றுக்கு 232 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 572 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது