பள்ளிக் குழந்தைகளைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைத்து வெடிகுண்டை தூக்கிக் கொண்டு ஓடிய தலைமைக் காவலர் அபிஷேக் பட்டேலுக்கு சிவராஜ் சிங் சௌஹான் 50,000 ரூபாய் பரிசாக அளித்துள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பள்ளி ஒன்றில் 400 மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்து சென்று போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது அங்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு வைத்திருப்பது தெரிய வந்தது.
இதனையடுத்து அந்த வெடிகுண்டை மீட்ட போலீஸ்காரர் அபிஷேக் பட்டேல் ஒரு கிலோ மீட்டர் தொலைவு அதனை சுமந்து சென்று பாதுகாப்பான பகுதியில் அதனை அப்புறப்படுத்தினார்.
போலீஸ்காரரின் இந்த அசாத்தியச் செயலைச் செய்துள்ளார். இது தொடர்பாக தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் எடுத்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
அபிஷேக் பட்டேலின் செயலுக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், அபிஷேக் பட்டேலுக்கு 50,000 ரூபாயை பரிசுத் தொகையாக அளித்தார். அதற்கான காசோலையை அவர், அபிஷேக் பட்டேலிடம் நேரில் வழங்கியுள்ளார்.