தேசிய செய்திகள்

கபில் சிபல் இல்லம் முன்பாக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம்

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து கேள்வி எழுப்பிய கபில் சிபலுக்கு எதிராக அக்கட்சியின் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் செயல்பாடு குறித்து கபில் சிபல் விமர்சித்து இருந்த நிலையில், அவருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் உள்ள கபில் சிபல் இல்லம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள் விரைவில் நலம் பெறுக என்ற பதாகைகளையும் ஏந்தி இருந்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் கட்சிக்கு தற்போது தலைவர்கள் என்று யாரும் இல்லை.முடிவுகளை எல்லாம் யார் எடுக்கிறார்கள் என்று என்று தெரியவைல்லை. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

காங்கிரசில் இருந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு திரும்ப வேண்டும் அப்போது தான் நாட்டை காப்பாற்ற முடியும். கட்சித் அமைப்புத் தேர்தல் கோரிக்கையை ஜி -23 தலைவர்கள் கடிதம் எழுதி ஒரு வருடம் ஆகியும் அந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என கபில் சிபல் கூறியிருந்தார்.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்