கோப்புப்படம் 
தேசிய செய்திகள்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் குறைப்பு வாபஸ் - நிர்மலா சீதாராமன்

சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

ஏப்ரல் 1-ம் தேதி முதல், வங்கிகளில் சேமிப்பு கணக்குகளின் வட்டி விகிதம் 4%ல் இருந்து 3.5%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் பொது வருங்கால வைப்பு நிதி (PPF) வட்டி விகிதம் 7.1%ல் இருந்து 6.4%ஆக குறைக்கப்பட்டுள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும் ஒராண்டுக்கான வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் 5.5 சதவீதத்தில் இருந்து 4.4 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 7.4 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக குறைக்கப்படுவதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 4 சதவீதத்தில் இருந்து 3.5 சதவீதமாக குறைக்கப்பட்டது வாபஸ் பெறப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தனது டுவிட்டரில், இந்தியாவின் சிறிய சேமிப்புத் திட்டங்களின் வட்டி விகிதங்கள் 2020-2021 கடைசி காலாண்டில் இருந்த விகிதங்களில் தொடர்ந்து இருக்கும், அதாவது மார்ச் 2021 வரை நிலவும் விகிதங்கள். மேற்பார்வை மூலம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் திரும்பப் பெறப்படும் என்று பதிவிட்டுள்ளார்.

இதன்படி பி.பி.எப், வருங்கால வைப்பு-ஓராண்டுகால வைப்புநிதி, மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டவட்டி விகிதம் குறைப்பு வாபஸ் பெறப்படுகிறது. ஏற்கனவே இருக்கும் வட்டி விகிதம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும். வட்டியை நேற்று நிதியமைச்சகம் குறைத்த நிலையில் நிர்மலா சீதாராமன் இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்