தேசிய செய்திகள்

காரில் நடந்த பாலியல் வன்முறையை கொள்ளை வழக்காக பதிவு செய்ய வற்புறுத்தல்; பெண் குற்றச்சாட்டு

டெல்லியில் ஓடும் காரில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தி வெளியே வீசப்பட்ட சம்பவத்தில் போலீசார் கொள்ளை வழக்காக பதிய வற்புறுத்தினர் என பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தினத்தந்தி

குர்காவன்,

இமாசல பிரதேசத்தின் கங்ரா மாவட்டத்தினை சேர்ந்த 30 வயது நிறைந்த பெண் ஒருவர் கடந்த வியாழ கிழமை இரவு 8 மணியளவில் பணி முடிந்து அலுவலகத்தினை விட்டு வெளியே வந்துள்ளார். அவர் ஹீரோ ஹோண்டா சவுக் பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு செல்வதற்காக வாடகை காருக்காக காத்து கொண்டு இருந்துள்ளார்.

அங்கு டாக்சி ஒன்று அவரருகே வந்து நின்றுள்ளது. அதில் 2 பேர் இருந்துள்ளனர். எனினும் அவர்களை பயணிகள் என கருதி சந்தேகம் அடையாமல் அந்த பெண் காரில் ஏறியுள்ளார்.

ஜர்சா சவுக் அருகே வந்தபொழுது, ஓட்டுநர் உள்பட 3 பேரும் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்தி கூச்சல் போட அவர் முயன்றுள்ளார். ஆனால், அவர்கள் பெண்ணின் கைகள் மற்றும் கால்களை கட்டி போட்டுள்ளனர்.

அவர்கள் சென்ற பகுதியில் பைக் ஒன்றில் 2 காவலர்கள் இருந்துள்ளனர். இதனால் அச்சமடைந்த 3 பேரும் காரை வேகமுடன் ராஜீவ் சவுக் நோக்கி ஓட்டி சென்றுள்ளனர். அங்கு பெண்ணிடம் இருந்த போன் மற்றும் பர்ஸ் போன்றவற்றை பறித்து கொண்டு காரில் இருந்து வெளியே தள்ளி விட்டுள்ளனர். அதன்பின்னர் அங்கிருந்து காரில் அவர்கள் தப்பிவிட்டனர்.

அந்த வழியே சென்ற நபர் ஒருவரின் உதவியுடன், தனது கணவரிடம் நடந்த விசயத்தினை பற்றி தகவல் தெரிவித்துள்ளார். பின் அந்த தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், தொடக்கத்தில் பாலியல் வன்முறை பற்றி காவல் துறையினர் எப்.ஐ.ஆர். பதிவு செய்யவில்லை. இந்த சம்பவத்தினை மூடி மறைக்க முயன்றுள்ளனர். 2 மணிநேரம் அவர்களை காக்க வைத்தபின்னர் பாலியல் வன்முறை நடந்ததற்கான சான்றை காண்பிக்கும்படி அவர்களிடம் கேட்டுள்ளனர் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அதன்பின்பு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது என புகார் அளிக்க வற்புறுத்தியதுடன், அதனடிப்படையில் எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர் என்று அந்த பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை