அவரிடம் போலீசார், 15 முதல் 25 போலீஸ் அதிகாரிகள் கால்நடைகள் உள்ள பகுதிக்கு அவற்றை மீட்பதற்கு சென்றுள்ளனர் என கூறியுள்ளனர். இதனை அடுத்து நந்தினி, செஜில் மற்றும் 2 கான்ஸ்டபிள்களுடன் காரில் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார்.
அங்கு போலீசார் யாரும் இல்லை. ஆனால் ஒரு பெரிய கும்பல் ஒன்று அங்கு திரண்டு இருந்துள்ளது. அவர்கள் கைகளில் பெரிய கற்கள் மற்றும் செங்கற்கள் இருந்துள்ளன. நந்தினி மற்றும் உடன் வந்தவர்களை திட்டி கொண்டே அவர்களது கார் மீது அந்த கும்பல் கற்களை வீசியுள்ளது. உடன் வந்த 2 போலீசார் தடுக்க முயன்றும் இந்த சம்பவத்தில் கார் சேதமடைந்து உள்ளது. நந்தினி மற்றும் செஜில் காயமடைந்துள்ளனர்.
போலீசில் நந்தினி அளித்த புகாரினை அடுத்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 14 பசுக்கள் மீட்கப்பட்டு உள்ளன என அவர்கள் கூறியுள்ளனர்.