எட்டா
உத்தரபிரதேச மாநிலம் பட்டி என்ற கிராமத்தில் 32 வயது பெண் ஒருவர், தவறான ஊசி செலுத்தப்பட்டதால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை வயிற்றுவலியால் அவதிப்பட்ட சங்கீதா என்ற பெண் டாக்டர் சூரஜ் என்பவருக்கு சொந்தமான கிளினிக்கில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் டாக்டர் சூரஜ் அவருக்கு ஊசி செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரம் கழித்து அந்த பெண் கிளினிக்கில் உயிரிழந்தார். சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மருத்துவமனைக்கு வருவதற்கு முன்பே டாக்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அந்த பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சுகாதாரத் துறையினரும் இது தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.