தேசிய செய்திகள்

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்; ஆண் குழந்தை பிறந்தது

ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் - ஆண் குழந்தை பிறந்தது.

உப்பள்ளி:

தார்வார் மாவட்டம் குந்துகோல் தாலுகா குடேனகட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தாதாபீர் அஜ்மாகான். இவரது மனைவி அப்ரீன். இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். நேற்று அதிகாலையில் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. அதையடுத்து தாதாபீர் மற்றும் குடும்பத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். தகவலின்பேரில் 108 ஆம்புலன்ஸ் குடேனகட்டி கிராமத்துக்கு வந்தது. மேலும் அப்ரீனை ஏற்றிக்கொண்டு தார்வார் டவுனில் உள்ள கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டிருந்தது. ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் அப்ரீனுக்கு பிரசவ வலி அதிகமானது. அதையடுத்து டிரைவர் சாலையோரம் ஆம்புலன்சை நிறுத்தினார். ஆம்புலன்சில் இருந்த மருத்துவ ஊழியர்கள் அசோக் பூஜார், பசவராஜ் ராத்தோடு ஆகியோர் அப்ரீனுக்கு பிரசவம் பார்த்தனர். இதில் அப்ரீனுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதையடுத்து தாயும், குழந்தையும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது தாயும், குழந்தையும் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். உரிய நேரத்தில் துரிதமாக செயல்பட்டு அப்ரீனுக்கு பிரசவம் பார்த்த மருத்துவ ஊழியர்கள் அசோக் பூஜார், பசவராஜ் ரத்தோடு ஆகியோருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்