தேசிய செய்திகள்

பண்ணை குட்டையில் தள்ளி 3 பிள்ளைகளை கொன்று பெண் தற்கொலை

பண்ணை குட்டையில் தள்ளி மூன்று குழந்தைகளை கொன்றுவிட்டு தானும் குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

தினத்தந்தி

விஜயாப்புரா

விஜயாப்புரா மாவட்டம் திகோட்டா தாலுகா துரவிதாண்டா கிராமத்தில் வசித்து வந்தவர் அனிதா பிண்டு பாய்(வயது 30). இவருக்கு திருமணம் முடிந்து கணவரும், 3 பிள்ளைகளும் இருந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் அனிதா தனது 3 பிள்ளைகளையும் அழைத்து கொண்டு கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள பண்ணை குட்டைக்கு சென்றார். பின்னர் 3 பிள்ளைகளையும் பிடித்து பண்ணை குட்டையில் தள்ளி கொலை செய்துவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி அறிந்ததும் திகோட்டா போலீசார் அங்கு விரைந்து சென்று 4 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். குடும்ப தகராறு காரணமாக இந்த விபரீத முடிவை அனிதா எடுத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இந்த சம்பவம் குறித்து திகோட்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்