புதுடெல்லி,
பெண்ணின் புகார் பேரில், அந்த ஊழியரை போலீஸ் நிலையத்துக்கு போலீசார் கூட்டி சென்றனர். கூட்ட நெரிசலில் தவறுதலாக கை பட்டு விட்டதாக தூதரக ஊழியர் முதலில் கூறினார்.
விசாரணைக்கு பிறகு, அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார். அவரை போலீசார் விடுவித்தனர். இதற்கிடையே, அவரை போலீசார் கைது செய்ததாகவும், பாகிஸ்தான் தலையீட்டால் விடுதலை செய்ததாகவும் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதை போலீசார் மறுத்தனர். இச்சம்பவத்துக்கு பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்துள்ளது