புதுடெல்லி
அரியானாவின் பஞ்ச்குலா நகரத்தில் வசிக்கும் பெண் பயணி ஒருவர் டெல்லியில் இருந்து அகமதாபாத் செல்ல விமான நிலையம் வந்து உள்ளார். அவர் தாமதமாக வந்ததால் அவர் பயணம் செய்யக்கூடிய விமானம் சென்று விட்டது. ஏர் இந்தியா விமானம், 5 மணிக்கு புறப்படுவதாக இருந்தது. பயணி 4-18 மணிக்கு வந்து உள்ளார். இதனால் அவருக்கு போர்டிங் மறுக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவர் அங்கிருந்த டூட்டி மானேஜருடன் சண்டை போட்டு உள்ளார். விவாதத்தின் போது பெண் பயணி ஏர் இந்திய ஊழியரை கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது. தொடர்ந்து விமான ஊழியரும் பயணியை அறைந்து உள்ளார். இதை தொடர்ந்து அங்கு வந்த பாதுகாப்பு மற்றும் போலீசார் உதவியுடன் அந்த விவகாரம் தற்போது தீர்க்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மேலாளர் தனது புகாரை விலக்கிக் கொண்டதாகவும் இதை தொடர்ந்து இருவரும் சமதானமாக போனதாகவும் ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.