தேசிய செய்திகள்

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை - வைரல் வீடியோ

டெல்லி மெட்ரோ ரெயிலில் பெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்டனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

டெல்லி மெட்ரோ ரெயிலில் 2 பெண்கள் குடுமிப்பிடி சண்டை போடும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரவி வருகிறது. எக்ஸ் வலைத்தளத்தில் வெளியான அந்த வீடியோ கிளிப்பில், நவநாகரிக உடையான பேண்ட் சட்டை அணிந்த 2 பெண்கள், ஒருவருக்கொருவர் தலைமுடியை பிடித்தபடி சண்டையிடுகிறார்கள்.

ஒருவர் மற்றவரை மெட்ரோ ரெயில் இருக்கையில் தள்ளிவிட்டு அவரை எழுந்துவிடாமல் இறுக்கிப்பிடித்துக் கொண்டே ஏதோ வாக்குவாதம் செய்கிறார். கீழே இருக்கும் பெண்மணியும் பதிலுக்கு மற்றவரின் தலைமுடியை பிடித்து இழுத்தபடி மோதிக் கொள்கிறார். இன்னொரு பெண் வந்து சண்டையை விலக்கிவிட முயற்சிப்பதும் பதிவாகி உள்ளது.

இருக்கைகள் காலியாக இருக்கும்போது, அவர்கள் எதற்காக சண்டையிட்டுக் கொண்டார்கள் என்பது பற்றிய விவரம் தெரியவில்லை. இந்த குடுமிப்பிடி சண்டைக் காட்சி வலைத்தளத்தில் பல லட்சம் பேரால் பார்க்கப்பட்டு உள்ளது.

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்

அஜித்பவார் பயணம் செய்த விமானத்தில் பலியான விமான பணிப்பெண்ணின் தந்தை கண்ணீர்

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து