லக்னோ,
உத்தர பிரதேசத்தில் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பாதுகாப்பு கருதி கடுமையான கட்டுப்பாடுகளை அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
தொழிற்சாலை, தொழில் நிறுவனங்களில் பெண் தொழிலாளர்கள் இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பணிபுரிய வேண்டும் என்றால் எழுத்துப்பூர்வமாக சம்மதம் தெரிவிக்க வேண்டும். இரவு 7 மணி முதல் காலை 6 மணி வரை பெண் தொழிலாளி பணி செய்ய மறுத்தால் வேலையில் இருந்து நீக்ககூடாது என உத்தரபிரதேச அரசு தொவித்துள்ளது.
மேலும், இரவு நேரத்தில் பணிபுரியும் போது குறைந்தபட்சம் 4 பெண் தொழிலாளர்களுக்கு மிகாமல் பணியில் அமர்த்தப்பட வேண்டும் எனவும், இரவில் பணிபுரியும் பெண் தொழிலாளருக்கு இலவச போக்குவரத்து, உணவு மற்றும் போதுமான பாதுகாப்புகள் வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும் என தொவித்துள்ளது.