தேசிய செய்திகள்

பஞ்சாபில் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளி - மீட்கும் பணிகள் தீவிரம்

பஞ்சாபில் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிய தொழிலாளியை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தினத்தந்தி

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் மணல் சரிந்து விழுந்ததில் தொழிலாளி ஒருவர் 70 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிக்கிக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னதாக நேற்று மாலை கர்தார்பூர் அருகே டெல்லி-கத்ரா விரைவுச்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக தூண் அமைப்பதற்காக ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. அப்போது ஆழ்துளை கிணற்றின் அடியில் சிக்கியிருந்த துளையிடும் இயந்திரத்தின் ஒரு பகுதியை விடுவிக்கும் முயற்சியில் சுரேஷ் என்பவர் மற்றொரு தொழிலாளியுடன் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் மற்றொரு தொழிலாளி ஆழ்துளை கிணற்றில் இருந்து வெளியே வந்தபோது, மணல் சரிந்து விழுந்ததில் சுரேஷ் ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டார். இதையடுத்து அவரை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்

விமான விபத்தில் பலியானவர்கள் பற்றிய உருக்கமான தகவல்கள்