தேசிய செய்திகள்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டம்: ஒரே மாதத்தில் 6 லட்சம் பேர் இணைந்தனர்

தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் ஒரே மாதத்தில் 6 லட்சம் பேர் இணைந்தனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மட்டும் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தில் 6 லட்சத்து 29 ஆயிரத்து 914 பேர் புதிதாக கணக்குகள் தொடங்கி இருக்கிறார்கள். மத்திய அரசு வெளியிட்டு இருக்கும் புள்ளி விவரத்தில் இந்த தகவல் இடம் பெற்று இருக்கிறது.

மேலும் கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2019 அக்டோபர் மாதம் வரை சுமார் 2 கோடியே 93 லட்சத்து 685 பேர் இந்த திட்டத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

இதேபோல் மாநில தொழிலாளர் காப்பீட்டு (இ.எஸ்.ஐ.) திட்டத்தில் 3 கோடியே 22 லட்சத்து 77 ஆயிரத்து 218 பேர் சேர்ந்து இருக்கின்றனர்.

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் 2017 செப்டம்பர் மாதம் முதல் 2019 அக்டோபர் மாதம் வரை 16 லட்சத்து 26 ஆயிரத்து 127 தொழிலாளர்கள் சேர்ந்து உள்ளனர்.

2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் 2018 ஏப்ரல் மாதம் வரை மத்திய அரசு கொண்டுவந்த வேலை வாய்ப்பு பற்றி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் மேற்கண்ட திட்டங்களில் வைப்புத்தொகை அதிகரித்து உள்ளது தெரியவந்து இருக்கிறது.

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை

அஜித்பவார் மறைவால் மகாயுதி அரசுக்கு ஆபத்தா?

விமான விபத்தில் கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன? பரபரப்பு தகவல்கள்