புதுடெல்லி,
தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச மாத ஊதியத்தை ரூ.18 ஆயிரமாக்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட வேண்டும், எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் வருகிற 5-ந்தேதி அகில இந்திய அளவில் தொழிலாளர்கள் போராட்டம் நடத்துகிறார்கள்.
அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு. மற்றும் அகில இந்திய கிசான் சபா ஆகிய 3 அமைப்புகள் இணைந்து இந்த போராட்டத்தை நடத்துகின்றன. இந்த போராட்டம் தொடர்பாக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும், பத்திரிகையாளர் சந்திப்பும் டெல்லியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு கூறுகையில், வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ள போராட்டத்தில் தமிழகத்தில் இருந்து 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளனர் என்றார்.