தேசிய செய்திகள்

உலக தடகள யு20 சாம்பியன்ஷிப் போட்டி: பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து

உலக தடகள யு20 சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

புதுடெல்லி,

உலக தடகள யு20 சாம்பியன்ஷிப் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மகளிர் நீளம் தாண்டுதலில் ஷைலி சிங் வெள்ளி பதக்கம் வென்றார். இது இந்தியாவுக்கு 3வது பதக்கம் ஆகும்.

இந்த நிலையில், போட்டியில் பதக்கம் வென்ற அனைவருக்கும் பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், நைரோபியில் நடந்த உலக தடகள யு20 சாம்பியன்ஷிப் போட்டியில் 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலம் என 3 பதக்கங்கனை வென்ற நம்முடைய தடகள வீரர் வீராங்கனைகளுக்கு என்னுடைய வாழ்த்துகள்.

நாடு முழுவதும் தடகள விளையாட்டு பிரபலமடைந்து வருகிறது. இது நல்ல காலம் வருவதற்கான ஒரு சிறந்த அடையாளம். கடின உழைப்பினை கொண்ட நம்முடைய தடகள வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துகள் என்று

தெரிவித்து உள்ளார்.

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி