தேசிய செய்திகள்

ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை: அமித்ஷா

ரபேல் போர் விமானங்கள் எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன் வாய்ந்தவை என்று அமித்ஷா தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

புதுடெல்லி,

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. அரியானா மாநிலம் அம்பாலா விமான படை தளத்தில் ரபேல் விமானங்கள் கம்பீரமாக தரையிறங்கின.

இந்திய விமானப்படை தளத்தில் ரபேல் விமானம் வந்திறங்கிய பின் உள்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்டுள்ள டுவிட் பதிவில், ரபேல் போர் விமானம் வந்திறங்கிய தினம் நமது வலுவான இந்திய விமானப்படைக்கு வரலாற்று சிறப்புமிக்க தினமாகும். இந்தியாவிற்கு பெருமிதம் அளிக்கக் கூடிய தருணம் இது.

'அடுத்த தலைமுறையைச் சேர்ந்த இந்த விமானங்கள் விமானப்படையில் இணைக்கப்பட்டிருப்பது , இந்தியாவை வலிமைமிக்க மற்றும் பாதுகாப்பான நாடாக மாற்ற வேண்டுமென்ற பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிப்பாட்டிற்கு சாட்சியமாக உள்ளது. இந்திய ராணுவத்தின் திறனை அதிகரிக்க மோடி அரசு உறுதி பூண்டுள்ளது. ரபேல் விமானங்கள் வானில் ஏற்படக்கூடிய எத்தகைய சவாலையும் முறியடிக்கும் திறன்வாய்ந்த உலகின் சக்திமிக்க சாதனங்கள் ஆகும் என்று பதிவிட்டுள்ளார்.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்