தேசிய செய்திகள்

உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை நிறைவு செய்தது

சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடையேயான உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் 26 வருடங்களை இன்று நிறைவு செய்துள்ளது.

மும்பை,

இந்தியாவில் சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடையே முதல் மகளிர் சிறப்பு ரெயில் சேவை கடந்த 1992ம் ஆண்டு மே 5ந்தேதி தொடங்கப்பட்டது. இது உலகின் முதல் மகளிர் சிறப்பு ரெயில் ஆகும்.

இரு ரெயில் நிலையங்களுக்கு இடையே மகளிருக்காக தொடங்கப்பட்ட இந்த சேவையானது தொடக்கத்தில் ஒரு நாளைக்கு 2 முறையே இயக்கப்பட்டு வந்தது. அதன்பின் நாளொன்றுக்கு 8 முறை என சேவை மேம்படுத்தப்பட்டது.

இந்த சிறப்பு ரெயில் இன்றுடன் 26 வருடங்களை நிறைவு செய்துள்ளது. சர்ச்கேட் மற்றும் போரிவலி ரெயில் நிலையங்களுக்கு இடைய இயக்கப்பட்டு வந்த இந்த ரெயில் சேவையானது கடந்த 1993ம் ஆண்டு விரார் நகர் வரை நீட்டிக்கப்பட்டது என மேற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டில் 18 ஆயிரம் முகாம்கள் மூலம் 2.22 கோடி பேருக்கு வேலை - மத்திய அரசு தகவல்

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...