திருவனந்தபுரம்,
கடந்த ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு பின்னர், மாநில அரசு மாநிலத்தை மீண்டும் கட்டியமைப்பதில் தோல்வி அடைந்ததற்கு எதிராக காங்கிரஸ் தலைவர் சுதாகரன் பேசும்போது, அவர் (முதல்வர் பினராயி விஜயன்) நிர்வாகத்தை திறம்பட நடத்துவார் என கட்சி எதிர்பார்த்தது ஆனால் அவர் ஒரு பெண்ணை விட மோசமாக நடத்தி வருகிறார்.
திறமையான முறையில் செயல்படும் ஒரு முதலமைச்சராக பினராயி விஜயன் இருப்பார் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் அவரால் மிகப்பெரிய பேரழிவு என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
அவர் அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது, அவர் ஏதாவது நல்லது செய்யலாம் என்று நினைத்தோம். ஆனால் அவர் ஒரு முட்டாள்தனமான முதலமைச்சராகி விட்டார். ஒரு பெண் கூட சிறப்பாக செய்திருப்பார். அவர் ஒரு பெண்ணை விட மோசமாக செயல்பட்டு வருகிறார் என கூறினார்.