தேசிய செய்திகள்

கவர்னருக்கு எதிரான தமிழக அரசின் ரிட் மனு; சுப்ரீம் கோர்ட்டில் நாளை மறுநாள் விசாரணை

கவர்னருக்கு எதிரான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்க உத்தரவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சார்பில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு வரும் 10-ந்தேதிக்கு தற்காலிகமாக பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் பாரதியார் பல்கலைக்கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் ஆகியவற்றிற்கு துணை வேந்தர்களை நியமிக்க தேடுதல் குழு அமைக்கும் கவர்னரின் அறிவிக்கைக்கு தடை கோரிய ரிட் மனுவையும் இணைத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கவர்னருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு நாளை மறுநாள் விசாரிக்கிறது. இதனிடையே பஞ்சாப் கவர்னருக்கு எதிராக மாநில அரசு தாக்கல் செய்த மனுவும் நாளை மறுநாள் விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு