தேசிய செய்திகள்

டெல்லியில், யமுனா நதி அபாய நிலையை எட்டியது

டெல்லியில் ஓடும் யமுனா நதி அபாய நிலையை எட்டியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தினத்தந்தி

புதுடெல்லி,

வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. அரியானாவிலும் கனமழை கொட்டியதால், அங்குள்ள பெரும்பாலான அணைகள் நிரம்பி வழிகின்றன. அரியானாவில் உள்ள ஹத்னி குண்ட் தடுப்பணையிலிருந்து 1.43 லட்சம் கன அடி நீர் டெல்லியிலுள்ள யமுனா நதியை நோக்கி திறந்து விடப்பட்டது.

இந்த நீரின் வரத்தால் யமுனா நதி ஆபத்தான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யமுனா நதியில் நீரின் அளவு 205.33 மீட்டரை தாண்டும் பட்சத்தில் அது மிகவும் அபாயகரமான நிலை ஏற்படும். யமுனா நதியிலுள்ள நீரின் அளவு தற்போது 205 மீட்டரை எட்டியுள்ளது.

ஆகவே யமுனா நதி அபாயகரமான கட்டத்தை நோக்கி சென்றுள்ளது. இதனையடுத்து யமுனா நதியின் மீது இருக்கும் பாலத்தில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அதேபோல லோஹா புல் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் யமுனா நதியின் கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

டெல்லியில் ஓடும் யமுனா நதி அபாய நிலையை எட்டியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து 9-வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன் - பிரதமர் மோடி பெருமிதம்

தமிழ்நாட்டில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க மேலும் 10 நாட்கள் அவகாசம் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பதவி விலகும் கேள்விக்கே இடமில்லை; பா.ஜ.க.வுக்கு கர்நாடக மந்திரி பதில்

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்