தேசிய செய்திகள்

ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் முடிவுக்கு ராஜ குடும்ப பெண் வாரிசு ஆதரவு

ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் முடிவுக்கு ராஜ குடும்ப பெண் வாரிசு ஆதரவு தெரிவித்துள்ளார்.

தினத்தந்தி

போபால்,

காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் தந்தை மாதவராவ் சிந்தியாவின் தங்கையான யசோதர ராஜே சிந்தியா, தற்போது மத்தியபிரதேசத்தில் பா.ஜனதா எம்.எல்.ஏ. வாக உள்ளார். அவர் முந்தைய பா.ஜனதா அரசில் மந்திரியாக இருந்தார். குவாலியர் ராஜ குடும்பத்தை சேர்ந்த யசோதர ராஜே சிந்தியா, ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் அத்தை ஆவார்.

சிந்தியாவின் முடிவை யசோதர ராஜே வரவேற்றுள்ளார். அவர் கூறியதாவது:-

காங்கிரசில் இருந்து விலகிய ஜோதிர்ஆதித்ய சிந்தியாவின் துணிச்சலான முடிவை வரவேற்கிறேன். ராஜமாதாவின் ரத்தம்தான், தேசநலன் கருதி இந்த முடிவை எடுக்க வைத்துள்ளது. இனி புதிய தேசம் பிறக்கும் என்று அவர் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது