தேசிய செய்திகள்

தொடர்ந்து உயரும் வெப்பநிலையால் டெல்லிக்கு மஞ்சள் அலெர்ட் - வானிலை மையம் அறிவிப்பு

அடுத்த 2 நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தினத்தந்தி

புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து மக்களை வாட்டி வருகிறது. நேற்று 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்த நிலையில், அடுத்த 2 நாட்களில் டெல்லியின் வெப்பநிலை 46 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது.

இதனால் டெல்லிக்கு மஞ்சள் அலெர்ட் விடப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. டெல்லியில் 1941 ஆம் ஆண்டு அதிகபட்சமாக 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருந்தது. அதன் பிறகு தற்போது தான் இந்த அளவிற்க்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது