தேசிய செய்திகள்

அன்பளிப்பாக அளித்த குல்லாவை அணிய மறுத்த யோகி ஆதித்யநாத்!

கவிஞர் சந்த் கபீர் தாஸ் சமாதிக்குச் சென்றபோது தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட குல்லாவை அணிய மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மறுத்துவிட்டார்.

தினத்தந்தி

லக்னோ,

கவிஞர் சந்த் கபீரின் 500-ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது சமாதிக்கு பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை வருகை தந்து மரியாதை செலுத்தினார். முன்னதாக அதற்கான ஏற்பாடுகளை பார்வையிடச் சென்ற முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு அங்கிருந்த நிர்வாகி காதிம் ஹுசைன் குல்லா ஒன்றை அன்பளிப்பாக அளித்தார்.

எனினும், அதை அணிவதற்கு யோகி பணிவுடன் மறுத்ததாகவும், அதை தன்னுடன் வைத்துக் கொண்டதாகவும் காதிம் ஹுசைன் கூறினார். இதேபோல், கடந்த 2011-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தின் அப்போதைய முதல் மந்திரியாக இருந்த நரேந்திர மோடி, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி அகமதாபாத்தில் உண்ணாவிரதம் இருந்தார். அப்போது மதகுரு ஒருவர் அன்பளிப்பாக வழங்கிய குல்லாவை அணிய நரேந்திர மோடி மறுத்தது நினைவுகூரத்தக்கது.

கேள்வி நேரத்தின்போது சலசலவென பேச்சு; எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கண்டனம்

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்