தேசிய செய்திகள்

உ.பி.யில் 46 மதரஸாக்களுக்கு சலுகைகள் நிறுத்தம், பா.ஜனதா எந்த மதத்திற்கும் மதிப்பளிக்காகது - காங்கிரஸ்

உத்தரபிரதேச மாநிலத்தில் 46 மதரஸாக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை யோகி ஆதித்யநாத் அரசு நிறுத்தியது.

லக்னோ,

46 மதரஸாக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் நிறுத்தப்பட்டதும் பாரதீய ஜனதா எந்த மதத்திற்கும் மதிப்பளிக்காது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தில் 46 மதரஸாக்களின் செயல்பாட்டில் முறைகேடுகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டதும் அவைகளுக்கு வழங்க மானியங்களை யோகி ஆதித்யநாத் அரசு புதன் கிழமை நிறுத்தியது. முறைகேட்டில் ஈடுபட்டதாக ஏப்ரல் மாதத்தில் இருந்து சலுகைகளை யோகி ஆதித்யாநாத் அரசு நிறுத்திவிட்டது. இப்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள 560 மதரஸாக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட மாஜிஸ்திரேட், மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் மற்றும் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் இணைந்த கூட்டு குழுவானது விசாரணை செய்து நடத்திய அறிக்கையின்படியே உ.பி. மாநில அரசு நடவடிக்கையை எடுத்து உள்ளது.

இதனையடுத்து பாரதீய ஜனதா எந்த மதத்திற்கும் மதிப்பளிக்காது என காங்கிரஸ் விமர்சனம் செய்து உள்ளது.

பாரதீய ஜனதா மற்றும் எங்களுடைய கொள்கைக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும், ஆனால் பாரதீய ஜனதா மற்றும் அதனுடைய தலைமை எந்தஒரு மதத்திற்கும் மதிப்பளிக்காது, என காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத் கூறி உள்ளார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்