அகர்தலா
பிரச்சாரத்திற்காக நேற்று கட்சி வேட்பாளர்களுடன் அகர்தலா வந்தடைந்த உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யனாத் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த 25 வருடங்களாக ஆட்சி செய்து வரும் இடது முன்னணி அரசாங்கம் மக்களுக்கு எந்த ஒரு நலத்திட்டங்களும் வழங்காமல் செயலிழந்து வருகிறது. மத்திய அரசின் சிறந்த திட்டங்களான பிரதான் மந்த்ரி முத்ரா யோஜனா,ஸ்டார்டப் இந்தியா,பிரதான் மந்த்ரி உஜ்வாலா யோஜனா முதலிய மக்களுக்கு பயன் தரும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தாமல் மறுத்து வரும் இந்த அரசாங்கம் வறுமையை ஒழிக்கும் அனைத்து திட்டங்களுக்கும் தடையாகவே உள்ளது.
மாநிலத்தின் கல்வி,சுகாதாரம் முதலிய பெரிய துறைகளில் பூஜ்ஜியத்திற்கு அடுத்ததாகவே இருக்கிறது என அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்தார். மேலும் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மத்திய அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மக்களுக்கு சென்றய சிறந்த பாலமாக அமையும் எனவும் கூறினார்.
60 சட்டமன்றத் தொகுதிகளையுடைய திரிபுராவில் பிப்ரவரி 18-ந்தேதி தேர்தலும், மார்ச் 3-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.