பிரகாஷ்ராஜ்  
தேசிய செய்திகள்

எதிர்க்கட்சிகளை மிரட்டி அடிபணிய வைத்துவிட்டீர்கள்: பிரதமர் மோடி மீது பிரகாஷ்ராஜ் குற்றச்சாட்டு

ஜனநாயகத்திற்கு எதிரானவர்களின் உண்மையான முகங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய மோடிக்கு நன்றி என்று பிரகாஷ்ராஜ் தேரிவித்தார்.

பெங்களூரு,

நாடாளுமன்றத்தில் நாளை தாக்கல் செய்யப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள வீடியோ அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

பிரகாஷ்ராஜ் விமர்சனம்

ஜனநாயகத்திற்கு எதிரானவர்களின் உண்மையான முகங்களை எங்களுக்கு அடையாளம் காட்டிய பிரதமர் மோடிக்கு மிக்க நன்றி. நாளை நீங்கள் நினைத்தபடியே தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேறிவிடும். உங்களின் ஆட்டம் ரொம்ப நன்றாக இருந்தது.

மேற்கு வங்க தேர்தலில் வெற்றி

மேலும், "ஞானேஷ் குமாரை வைத்து மேற்கு வங்க தேர்தலில் வெற்றி பெற்றீர்கள். தற்போது, மசோதாவை நிறைவேற்றுவதற்காக எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களை வழக்குகளை காட்டி மிரட்டி, அவர்களையும் உங்களுக்கு அடிபணிய வைத்துவிட்டீர்கள்.

புதிய வீடியோ

ஏற்கனவே இந்த மசோதாவுக்கு திமுக ஆதரவு தெரிவித்ததை விமர்சித்து வீடியோ வெளியிட்டிருந்த நிலையில், தற்போது பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள இந்த புதிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT